'குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது.
'குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்
Published on

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்க இருந்த தேவிஸ்ரீ பிரசாத் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தற்போது பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இப்படத்திற்கான டப்பிங் பணியை சமீபத்தில் நடிகர் அஜித்குமார் நிறைவு செய்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், 'குட் பேட் அக்லி' படத்தின் ஒரு சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட உள்ளன. அதற்கான படப்பிடிப்பு பணிகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளன. அப்போது பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ படப்பிடிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளார். இவர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவருடைய சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com