வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை...அதிர்ச்சியில் திரையுலகம்

2 வாரங்களுக்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கராச்சி,
பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஹுமைரா அஸ்கர் அலி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தானை சேர்ந்த புகழ் பெற்ற நடிகை ஹுமைரா அஸ்கர் அலி. அவருக்கு வயது 32. கராச்சியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அவர், வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சமீபகாலமாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்தநிலையில், வீட்டின் உரிமையாளர் அங்கு சென்றுபார்த்தபோது அவர் இறந்தநிலையில் கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
அவரது உடல் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடற்கூராய்வுக்கு பின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story






