பிரபல தமிழ் நடிகர் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக நடிகை ஸ்ரீ ரெட்டி டுவிட்

பிரபல தமிழ் நடிகர் ஒருவர் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக அவரது படத்தை போட்டு நடிகை ஸ்ரீ ரெட்டி டுவிட் செய்து உள்ளார். #ShriReddy
பிரபல தமிழ் நடிகர் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக நடிகை ஸ்ரீ ரெட்டி டுவிட்
Published on

ஐதராபாத்

நடிகைகள் பலர் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துக் கொள்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்துக்கொண்டிருந்தாலும், கடந்த சில மாதங்களாக இது குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

அதிலும்,தன்னை பட வாய்ப்புக்காக படுக்கையை தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பற்றி பல்வேறு தகவல்களை கூறி அதிர்ச்சி அடைய வைத்தார் நடிகை ஸ்ரீ ரெட்டி . ஆனால் அவர்கள் அதனை மறுத்தனர்.

தற்போது மேலும் ஒரு பெரிய அதிர்ச்சி வந்துள்ளது, ஆம், இவர் குற்றசாட்டில் பிரபல தமிழ் இயக்குனர் ஒருவரும் சிக்கியுள்ளார்.

அவர் வேறு யாருமில்லை இயக்குனர் முருகதாஸ் தான், ஸ்ரீரெட்டி தன் டுவிட்டர் பக்கத்தில் என்ன முருகதாஸ் சார், க்ரீன்பார்க் ஹோட்டல் ஞாபகம் உள்ளதா?. நீங்கள் எனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை, அங்கு நிறைய.... என்று டுவிஸ்ட் வைத்துள்ளார், மேலும் நீங்கள் நல்ல மனிதர் என்றும் குறிப்பிட்டுள்ளார், எதற்காக இப்படி சொன்னார் என்று தெரியவில்லை, எது எப்படியோ இந்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சை ஓயும் முன் இன்று மீண்டும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு அடுத்த அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

5 வருடங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நட்சத்திர கிரிக்கெட் நடந்தபோது பார்க் ஓட்டலில் நடந்தபார்ட்டி ஞாபகம் இருக்கா மிஸ்டர்? நீ எனது ---- சுவைத்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது... என்னுடன் டான்ஸ் ஆடும் போது எனக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக சொன்னாயே.. ஞாபகம் இருக்கா... என அவர் ஒரு நடிகரின் படத்தை போட்டு டுவிட் செய்து உள்ளார்.

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தன்னை படவாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லைகள் செய்தவர்களை பட்டியலிட்டு தெலுங்கு சினிமா மையம் கொண்டிருந்த புயல் தற்போது தமிழ் திரையுலகமும் நோக்கி திரும்பி உள்ளது. ஆனால் இதில் எந்த அளவு உண்மை உள்ளது என தெரியவில்லை .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com