அல்லு அர்ஜுனுடன் ரொமான்ஸ் செய்ய விரும்பும் பிரபல தமிழ் நடிகை


Popular Tamil actress wants to romance Allu Arjun
x
தினத்தந்தி 26 Feb 2025 8:14 AM IST (Updated: 26 Feb 2025 9:08 AM IST)
t-max-icont-min-icon

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சென்னை,

கடந்த 2017-ம் ஆண்டு வெளியான "மேயாத மான்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், யானை, திருச்சிற்றம்பலம், பத்து தல' என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கடைசியாக இவர் 'ரத்னம்', "இந்தியன் 2", "டிமான்ட்டி காலனி 2" , 'ஜீப்ரா' மற்றும் 'பிளாக்' ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், அல்லு அர்ஜுன் குறித்த இவரது கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அப்படி ஒரு வாய்ப்புக்காக பலர் காத்திருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது பிரியா பவானி சங்கரும் இணைந்திருக்கிறார். இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய பிரியா, அல்லு அர்ஜுன் மிகவும் பிரபலமானவர் என்று கூறினார். மேலும், அவருடன் திரையில் தோன்ற விரும்புவதாகவும், ரொமான்ஸ் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார். இந்த கருத்துக்கள் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story