நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் பிரபல தமிழ் இயக்குனர்

நடிகர் நாகார்ஜுனாவின் 100-வது படத்தை 'நித்தம் ஒரு வானம்' பட இயக்குனர் ரா.கார்த்திக் இயக்க உள்ளார்.
நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் பிரபல தமிழ் இயக்குனர்
Published on

சென்னை,

தெலுங்கு திரை உலகில் அறிமுகமாகி இந்திய அளவில் பிரபல நடிகராக இருப்பவர் நாகார்ஜுனா. தெலுங்கு திரை உலகில் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.1986-ம் ஆண்டு வெளியான 'விக்ரம்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நாகார்ஜுனா பல வெற்றி படங்களை கொடுத்தார்.

தற்போது தனுஷுடன் இணைந்து 'குபேரா' படத்திலும், ரஜினியின் 'கூலி' படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நாகார்ஜுனா, அடுத்ததாக தனது 100-வது படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். அவரது 100-வது படத்தை தமிழ் சினிமா இயக்குனர் ரா.கார்த்தி இயக்க இருக்கிறார்.

இயக்குனர் ரா.கார்த்தி 2022-ம் ஆண்டில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'நித்தம் ஒரு வானம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நாகார்ஜுனாவின் 100-வது படத்தை ரா.கார்த்தி இயக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com