பாலியல் புகார்: கின்னஸ் சாதனையாளர் தெலுங்கு பாடகர் கஜல் சீனிவாஸ் கைது

கின்னஸ் சாதனையாளர் பிரபல பாடகர் கஜல் சீனிவாஸ் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார். #singersrinivas #sexualharassment.
பாலியல் புகார்: கின்னஸ் சாதனையாளர் தெலுங்கு பாடகர் கஜல் சீனிவாஸ் கைது
Published on

ஐதராபாத்,

பிரபல தெலுங்கு பாடகர் கேசிராஜு சீனிவாஸ். இவர் கஜல் பாடல்கள் பாடி புகழ் பெற்றதால் கஜல் சீனிவாஸ் என்று அழைக்கப்படுகிறார்.

இவர் ஆலயவாணி என்ற பெயரில் வெப் ரேடியோ நடத்தி வருகிறார். இங்கு 29 வயது பெண் ரேடியோ வர்ணணையாளராக பணியாற்றி வந்தார்.

குட்டா போலீஸ் நிலையத்தில் பாடகர் சீனிவாஸ் மீது பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் சீனிவாஸ் தன்னை நீண்ட நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக தெரிவித்து இருந்தார்.

புகாரை பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் . இன்று அதிகாலையில் சீனிவாஸ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பாடகர் சீனிவாஸ் கடந்த 2008-ம் ஆண்டு காந்தி நினைவு நாளில் நடந்த நிகழ்ச்சியில் 76 மொழிகளில் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகர் சீனிவாஸ் ஏ பிலிம் பை அரவிந்த் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.

புகார் பற்றி பாடகர் சீனிவாஸ் கூறுகையில், அந்த பெண் என் மகள் போன்றவர். சமீபத்தில் விபத்தில் இடது தோள்பட்டையில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் என்னை மசாஜ் செய்து விடச் சொன்னார். இதற்கு என்னிடம் மருத்துவ ஆதாரம் இருக்கிறது. அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை என்றார்.

புகார் கொடுத்த பெண் கூறுகையில், சீனிவாஸ் என்னிடம் கடந்த 8 மாதங்களாகவே தவறாக நடந்து வருகிறார். பலமுறை கண்டித்தும் அவர் மாறவில்லை. சமீபத்தில் அவரது தொந்தரவு எல்லை மீறிப் போகவே புகார் செய்தேன் என்றார்.

#Singersrinivas | #Sexualharassment | #Cinemanews

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com