

கடந்த பிப்ரவரி மாதம் பின்னணிப் பாடகியாக சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா பிரபலங்களின் அந்தரங்கமான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சுசித்ராவுக்கு மனநிலை சரியில்லை, அவருடைய டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டனர் என்று சுசியின் கணவர் கார்த்திக் கூறினார்.
ஆனால், அதை மறுத்த சுசித்ரா, தன் கணக்கை யாரும் ஹேக் செய்யவில்லை என்று தெரிவித்தார்.
10 நாட்களுக்கும் மேலாக பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பின்னர், சுசித்ராவின் டுவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது.
இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மனம் திறந்த பேட்டி அளித்துள்ள சுசித்ரா,
தனக்கு மனநிலை சரியில்லாமல் போனது உண்மைதான. தற்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தேறிவருகிறேன். பிப்ரவரி 19ம் தேதி முதல் எனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.
டுவிட்டரில் வெளியான புகைப்படங்களால் பிரபலங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு மனம் வருந்துகிறேன்.
தற்போது அமெரிக்காவில் என்னுடைய சகோதரியில் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறேன் என கூறியுள்ளார்.