7 ஆண்டுகளுக்குப் பிறகு 'பௌசி' படத்திற்காக அதை மாற்றிய பிரபாஸ்... ரசிகர்கள் உற்சாகம்

பிரபாஸ் தற்போது ஹனு ராகவபுடி இயக்கும் ‘பௌசி’ படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
‘பாகுபலி’ படத் தோற்றத்திலான சுயவிவரப் படத்தை (DP) நடிகர் பிரபாஸ் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியுள்ளார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வரவிருக்கும் ‘பௌசி’ படத்தின் புகைப்படத்தை புதிய டி.பி.யாக வைத்துள்ளார்.
Published on

சென்னை,

‘பாகுபலி’ படத் தோற்றத்திலான சுயவிவரப் படத்தை (DP) நடிகர் பிரபாஸ் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியுள்ளார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வரவிருக்கும் ‘பௌசி’ படத்தின் புகைப்படத்தை புதிய டி.பி.யாக வைத்துள்ளார்.

அடுத்தடுத்து படப்பிடிப்பு

இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் தற்போது ஹனு ராகவபுடி இயக்கும் ‘பௌசி’ படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து இடைவெளியின்றி ‘ஸ்பிரிட்’ படத்தின் படப்பிடிப்பிலும் அவர் பங்கேற்க உள்ளார்.

‘பௌசி’ படத்தின் தயாரிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரபாஸ் படத்தின் முதல் பார்வை போஸ்டரை தனது டி.பி.யாக வைத்திருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றம், அவரது திரைப்பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தை குறிக்கிறதா? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சுதந்திர தினத்தில் முக்கிய அறிவிப்பு?

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை ‘பௌசி’ படம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என பிரபாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ஹனு ராகவபுடி இயக்கும் இப்படத்தில் இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com