நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை

சீதா ராமம் படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை
Published on

துல்கர் சல்மான், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், சுமந்த் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகிய சீதா ராமம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றிப்பட இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில்தான் பிரபாஸ் நடிக்கவிருக்கிறார். இதன் பூஜை தொடங்கி படப்பிடிப்பு துவங்கியுள்ளதை பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது.

பிரபாஸின் 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தற்போது நடிகர் பிரபாஸ் 'தி ராஜ் சாப்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அனிமல் பட இயக்குநர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறியிருந்த நிலையில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

இயக்குநர் ஹனு ராகவபுடி, "இன்னொரு அற்புதமான படம். மிகவும் முக்கியமான மனிதர்களுடன் மறக்க முடியாத பயணம்" எனக் கூறியுள்ளார்.

நடிகர் பிரபாஸ் - இயக்குநர் ஹனு ராகவபுடி கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (ஆகஸ்ட் 17) தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை இயக்குனர் ஹனு ராகவப்புடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இப்படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் ஆக்ஷன் படமாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com