

தெலுங்கு சினிமாவில் கலக்கி வந்த பிரபாஸ், பாகுபலி படத்துக்கு பிறகு இந்தியளவில் பிரபலமானார். அதன் பின்னர் அவரை வைத்து எடுக்கும் படங்கள் பான் இந்தியா படங்களாகவே எடுக்கப்பட்டு வருகின்றன. பெரிய பட்ஜெட் படங்களில் மட்டும் நடிக்கும் ஹீரோவாக பிரபாஸ் மாறிவிட்டார்.
சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 'தி ராஜாசாப்' பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. தற்போது அவர் 'கல்கி-2', 'ஸ்பிரிட்' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் ஐதராபாத்தில் 3 ஏக்கர் நிலத்தில் ஒரு பிரமாண்ட பங்களாவை பிரபாஸ் கட்டி வருகிறார். இதன் கட்டுமான மதிப்பு மட்டுமே சுமார் ரூ.180 கோடி என்று சொல்லப்படுகிறது. அதில் நீச்சல் குளம், தியேட்டர், ஜிம் என பல சொகுசு அம்சங்கள் இடம் பெறுகிறதாம். பிரபாஸ் கட்டி வரும் புதிய வீட்டின் மாதிரி புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.