சிறுநீரக கோளாறால் உயிருக்குப் போராடும் நடிகர்...ரூ. 50 லட்சம் கொடுத்து உதவிய பிரபாஸ்

பிரபல நகைச்சுவை நடிகரான பிஷ் வெங்கட், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார்.
சென்னை,
நடிகர் பிஷ் வெங்கட்டின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு நடிகர் பிரபாஸ் ரூ.50 லட்சம் உதவி வழங்கி இருக்கிறார். நடிகர் பிரபாஸின் குழு நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக பிஷ் வெங்கட்டின் மகள் ஸ்ரவந்தி தெரிவித்திருக்கிறார்.
தெலுங்கு திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரான பிஷ் வெங்கட், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார்.
அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும் அதற்கு சுமார் 50 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டநிலையில், நடிகர் பிரபாஸின் குழுவினர் பிஷ் வெங்கட்டின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு நிதி உதவி வழங்க முன்வந்துள்ளனர்.
நிதி உதவி கிடைத்தபோதிலும், சிறுநீரக நன்கொடையாளரை கண்டறிவது பெரும் சவாலாக உள்ளதாகவும், குடும்பத்தில் யாருடைய சிறுநீரகமும் பொருத்தமாக இல்லை என்றும் ஸ்ரவந்தி தெரிவித்துள்ளார்.
சிரஞ்சீவி, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் , ஜூனியர் என்.டி.ஆர் போன்ற முன்னணி நடிகர்கள் நன்கொடையாளரை கண்டறிய உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.