போர்க்களத்தில் பிரபாஸ்.. ‘பவுசி’ படத்தின் மிரட்டலான போஸ்டர் வைரல்

பிரபாஸ் நடிக்கும் 'பவுசி' திரைப்படம் டிசம்பர் 3-ந்தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

போர்க்களத்தில் பிரபாஸ்.. ‘பவுசி’ படத்தின் மிரட்டலான போஸ்டர் வைரல்
Published on

சென்னை,

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் 'பவுசி' படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. போரினால் சிதைந்த ஒரு சூழலுக்குள் அழைத்து செல்லும் வகையில் வெளியாகியுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ்

இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக 'தி ராஜாசாப்' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. பிரபாஸ் தற்போது 'சீதா ராமம்' படத்தின் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் 'பவுசி' படத்தில் நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக இந்த படம் தயாராகிறது. இதில் இமான்வி, அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி - சிரீஸ் சார்பில் நவீன் எர்னேனி,ரவி சங்கர், பூஷன்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ஆக்சன் மற்றும் காதல் கலந்த கதை

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் 'பெளசி' திரைப்படம் அதிரடி ஆக்சன் மற்றும் காதல் கலந்த கதைக்களத்தில் உருவாகி வருகிறது. பிரபாஸின் மாறுபட்ட தோற்றமும், ஹனு ராகவபுடியின் உணர்வுப்பூர்வமான திரைக்கதையும் இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு சுதீப் சட் டர்ஜி ஒளிப்பதிவு செய்கிறார், விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

மிரட்டலான போஸ்டர் வைரல்

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியானது. போரினால் சிதைந்த ஒரு சூழலுக்குள் அழைத்து செல்லும் வகையில் வெளியாகியுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காட்சி, வன்முறை நிறைந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தின் மத்தியில் சிக்கிக் கொண்ட ஒரு மனிதனின் உணர்வை வெளிப்படுத்துகிறது. 'நமது நாளைக்காகப் போராடிய ஒவ்வொரு பவுசியின் வீரத்திற்கும் தலைவணங்குகிறோம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

'பவுசி' திரைப்படம் டிசம்பர் 3-ந்தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இந்த படத்தை தியேட்டர்களில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com