பிரபாஸின் "ஸ்பிரிட்" படப்பிடிப்பு அப்டேட்!


பிரபாஸின் ஸ்பிரிட் படப்பிடிப்பு அப்டேட்!
x
தினத்தந்தி 12 April 2025 9:48 PM IST (Updated: 23 May 2025 5:07 AM IST)
t-max-icont-min-icon

பிரபாஸின் 'ஸ்பிரிட்' படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சலார்' மற்றும் 'கல்கி 2898 ஏடி' படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில், 'கல்கி 2898 ஏடி' ரூ.1,050 கோடி வசூலித்திருக்கிறது. இந்த படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.அதன்படி, 'ஸ்பிரிட்', 'சலார் 2' மற்றும் 'ராஜா சாப்' உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் .'ஸ்பிரிட்' பிரபாசின் 25வது படமாகும். இதனை, 'அர்ஜுன் ரெட்டி' மற்றும் 'அனிமல்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். மேலும், இப்படம் 8 மொழிகளில் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளதாகவும் தெரிகிறது.

இந்தப் படத்தில் பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. பாலிவுட் பிரபலங்களான சயிப் அலிகான், கரீனா கபூர் நடிப்பதாக தகவல் சமீபத்தில் தகவல் வெளியாகியது. இந்தப் படத்தை பத்ரகாளி பிக்சர்ஸ், டி- சீரிஸ் இணைந்து தயாரிக்கிறது. பிரபாஸுக்கு வில்லனாக கொரியன் சூப்பர் ஸ்டார் மா டோங்-சியோக் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

'ஸ்பிரிட்' படத்தின் ஸ்க்ரிப்ட் எழுதும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது . ஸ்பிரிட் திரைப்படத்தை வழக்கமான போலீஸ் திரில்லர் கதையாக மட்டும் அல்லாமல் புதுமையான கதையாக கொடுக்க முயற்சி செய்து வருகிறாராம் சந்தீப் ரெட்டி. மேலும் நடிகர்களின் தேர்வு நடந்து வருவதாகவும், இயக்குனர் இந்த படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 More update

Next Story