பிரபாஸ் நடித்துள்ள 'சலார்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது..!

'சலார்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பிரபாஸ் நடித்துள்ள 'சலார்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது..!
Published on

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரீயா ரெட்டி, கருடா ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'சலார்' திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 55 நிமிடம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் 'சலார்' படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'பல கதையில்' என்ற பாடல் வெளியாகி உள்ளது. மதுரகவி எழுதியுள்ள இந்த பாடலை குழந்தைகள் பலர் பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com