பிரபாஸ் நடித்துள்ள 'சலார்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது..!

'சலார்' திரைப்படம் வருகிற 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பிரபாஸ் நடித்துள்ள 'சலார்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது..!
Published on

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், 'சலார்' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது. மாலை 7.19 மணிக்கு டிரைலர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'சலார்' திரைப்படம் வருகிற 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com