

சென்னை,
நாக் அஸ்வின் இயக்கத்தில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.
சமீபத்தில்தான் படத்தின் முதல் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து, பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்திற்காக புதிய வகை துப்பாக்கியின் புகைப்படத்தை படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படமும் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், டார்லிங்ஸ், கடைசியாக ஒரு ஸ்பெஷல் நபர் நமது வாழ்க்கையில் நுழைய போகிறார், காத்திருங்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்து பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் பெரும்பாலானோர், தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பிரபாஸ் இவ்வாறு பகிர்ந்துள்ளார் என்றும், சிலர், அது கல்கி 2898 ஏ.டி படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram