பிரபாஸின் “ஸ்பிரிட்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி ‘ஸ்பிரிட்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.
பிரபாஸின் “ஸ்பிரிட்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on: 

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

திரிப்தி டிம்ரி தெலுங்கில் அறிமுகம்

நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஸ்பிரிட்’. இதில் பிரபாஸ் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.

கொரிய சூப்பர் ஸ்டார் டான் லீ

பெரிய பட்ஜெட்டில் பான் ஆசிய திரைப்படமாக ‘ஸ்பிரிட்’ உருவாகி வருகிறது. பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய், காஞ்சனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கொரிய சூப்பர் ஸ்டார் டான் லீயும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் நாயகியாக முதலில் நடிகை தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின், தீபிகா விதித்த நிபந்தனைகள் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒத்து வராததால் நடிகை டிருப்தி திம்தி ஒப்பந்தம் தேர்வு செய்யப்பட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த நிலையில், ‘ஸ்பிரிட்’ படம் 2027ம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி வெளியாகும் என இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாக இருந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com