'தி ராஜா சாப்' - பழையதாகிவிட்டது...பாடல்களை மீண்டும் உருவாக்கும் தமன்


Prabhass The Raja Saab delayed as Thaman reveals reworked soundtrack plans
x
தினத்தந்தி 19 March 2025 6:16 AM IST (Updated: 19 March 2025 6:39 AM IST)
t-max-icont-min-icon

இப்படத்தின் பாடல்கள் குறித்து தமன் தகவல் தெரிவித்திருக்கிறார்.

சென்னை,

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவந்த பிரபாஸ், 'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் பிரபலமானார். பின்னர் இவரது நடிப்பில் வெளியான 'சலார் மற்றும் கல்கி 2898 ஏ.டி' படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களான அமைந்தன. அதனை தொடர்ந்து தற்போது, மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் 'தி ராஜா சாப்' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கிறது. தமன் இசையமைக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் குறித்து தமன் தகவல் தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், 'சிறிது காலத்துக்கு முன்பு 'தி ராஜா சாப்' படத்துக்கான பாடல்களை உருவாக்கிவிட்டேன். ஆனால், அவை இன்னும் படமாக்கப்படாததால், அவை பழையதாகி விட்டதாக உணர்ந்தேன். இதனால் அவற்றை நீக்கிவீட்டு புதிதாக மீண்டும் பாடல்களை உருவாக்கி வருகிறேன்" என்றார்.


Next Story