

நடிகர் பிரபுதேவா முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்து விட்டு நயன்தாராவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள தயாரான நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். பின்னர் நயன்தாரா டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பிரபுதேவா தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் பிரபுதேவாவுக்கு முதுகுவலி ஏற்பட்டு மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது அங்கு பணியாற்றிய பிஸியோதெரபி டாக்டர் ஹிமானி சிங்குடன் நட்பு ஏற்பட்டு காதல் மலர்ந்ததாகவும் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
திருமணம் செய்து கொண்ட தகவலை பிரபுதேவா யாரிடமும் தெரிவிக்கவில்லை. மனைவியையும் வெளியில் எங்கேயும் அழைத்து வரவில்லை. இந்த நிலையில் முதல் முறையாக இரண்டாவது மனைவி ஹிமானி சிங்கை அழைத்துக்கொண்டு திருப்பதி கோவிலுக்கு சென்று பிரபுதேவா சாமி கும்பிட்டு உள்ளார்.
இரண்டாவது மனைவி கையைப் பிடித்துக்கொண்டு அவருக்கு பாதுகாப்பு அளித்தபடி பிரபுதேவா செல்லும் புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரபுதேவா பிறந்த நாளையொட்டி ஹிமானி சிங் வெளியிட்டுள்ள வீடியோவில் தன்னை பிரபுதேவா அக்கறையோடு பார்த்துக்கொள்வதாகவும் அவரை திருமணம் செய்ததற்காக பெருமைப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
View this post on Instagram