வடிவேலுவுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட பிரபுதேவா

நடிகர் பிரபுதேவா, வடிவேலுடன் இருக்கும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத காமெடி கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா - வடிவேலு கூட்டணி. நடிகர் பிரபு தேவா,வடிவேலு இணைந்து காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, காதலா காதலா, மனதை திருடி விட்டாய், எங்கள் அண்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர். இதில்‘மனதை திருடி விட்டாய்’ திரைப்படம் 2001ம் ஆண்டு வெளி வந்தது. இதில் நடிகர் பிரபு தேவா,வடிவேலு,விவேக்,கவுசல்யா போன்ற பலர் நடித்து இருந்தனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் விவேக்,வடிவேலு, பிரபு தேவாவின் காம்போ மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது. 2004ம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தில் இறுதியாக வடிவேலு - பிரபு தேவா இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் பிரபு தேவா இந்தியளவில் அறியப்படும் நடிகர், இயக்குநராக இருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ‘பகீரா’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.தொடர்ந்து, நடிகர் விஜய்யுடன் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
23 ஆண்டு கழித்து பிரபு தேவாவும், வடிவேலும் சேர்ந்து நடிக்கின்றனர். இப்படத்தை சாம் ரொட்ரிகஸ் இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில், வடிவேலுவுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பிரபுதேவா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,“தை பிறந்தால் வழி பிறக்கும். உடற்பயிற்சி செய்தால், உடம்பு சிறக்கும். இப்படிக்கு, புயலும் புயலும். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.






