

சென்னை,
தமிழ் திரைத்துறையில் பிரபலமான காமெடி நடிகர் வடிவேலு. இவர் தற்போது பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே, நடிகரும், டைரக்டரும், நடன கலைஞருமான பிரபுதேவா, வடிவேலுவுடன் இணைந்து ''காதலன்'', ''எங்கள் அண்ணா'', ''மனதை திருடிவிட்டாய்'', ''மிஸ்டர் ரோமியோ'' போன்ற படங்களில் நடித்துள்ளார். பிரபுதேவா இயக்கிய ''போக்கிரி'' மற்றும் ''வில்லு'' திரைப்படங்களில் வடிவேலு பணியாற்றியுள்ளார்
இந்நிலையில், பிரபுதேவா - வடிவேலு இணைந்து தற்போது ‘பேங் பேங்’ என்ற படத்தில் நடித்துள்ளார். சாம் ஆண்டனி இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாகியுள்ளது.
‘பேங் பேங்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த மே மாதம் நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசர் நாளை வெளியிடப்பட உள்ளது. நாளை மாலை 4.56 மணிக்கு ‘பேங் பேங்’ படத்தின் டீசர் ரிலீஸ் ஆக உள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது.