பிரபுதேவா, வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு நடித்துள்ள ‘பேங் பேங்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
பிரபுதேவா, வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Published on

சென்னை,

நீண்ட வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா, வடிவேலு இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றனர். ‘முசாசி’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

பிரபுதேவா, வடிவேலு ஏற்கனவே இணைந்து ''காதலன்'', ''எங்கள் அண்ணா'', ''மனதை திருடிவிட்டாய்'', ''மிஸ்டர் ரோமியோ'' போன்ற படங்களில் நடித்தனர். பிரபுதேவா இயக்கிய ''போக்கிரி'' மற்றும் ''வில்லு'' திரைப்படங்களில் வடிவேலு பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஒன்றாக நடித்து வெளியான படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாகியுள்ளது.

பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு ‘பேங் பேங்’எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் டீசரை நடிகர் எஸ்.ஜே. சூர்யா கடந்த ஜனவரியில் வெளியிட்டார்.

இந்த நிலையில், பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள ‘பேங் பேங்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com