“டியூட்” படத்தின் படப்பிடிப்பு வீடியோவை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு இணைந்து நடித்துள்ள ‘டியூட்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
“டியூட்” படத்தின் படப்பிடிப்பு வீடியோவை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் டிராகன் படம் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி'என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது.

கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் படத்தில் பிரதீப் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் டியூட் படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காமெடி கலந்த படமாக இப்படம் நேற்று வெளியானது.

நேற்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கில் வெளியான டியூட் படத்தை பிரதீப் ரங்கநாதன் ரசிகர்களுடன் சேர்ந்து கண்டுகளித்தார்.

இந்நிலையில், டியூட் படத்தில் நடித்த படப்பிடிப்பு காட்சிகளை பிரதீப் ரங்கநாதன் வீடியோவாக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com