மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்


மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்
x

நடிகர் பிரதீப் ரங்கநாதன் புதிய படமொன்றை ஏஜிஎஸ் நிறுவனத்திற்காக இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன் பிறகு, 'லவ் டுடே' என்ற படத்தை இயக்கி நடித்தார். அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இவரது நடிப்பில் வெளியான 'டிராகன்' படம் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 'டூட்' படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடித்து வருகிறார். புதிய படம் தொடர்பாக பிரதீப் ரங்கநாதனை அணுகியதாக இயக்குனர் பிரேம்குமார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் மீண்டும் தானே இயக்கி, நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story