பிரதீப் ரங்கநாதனின் “டியூட்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வீடியோ பாடல் வெளியீடு


தினத்தந்தி 28 Aug 2025 7:56 PM IST (Updated: 17 Sept 2025 8:35 PM IST)
t-max-icont-min-icon

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடித்துள்ள “டியூட்” படம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் சமீபத்தில் டிராகன் படம் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி'என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் 'டியூட்' படத்திலும் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 'டியூட்' படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுவதுமாக காமெடி கலந்த படமாக இப்படம் தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ''ஊரும் பிளட்'' வெளியாகியுள்ளது. கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது. இப்பாடல் பால் டப்பா வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளார்.

இது மட்டுமில்லாமல், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி' படமும் தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது. பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

1 More update

Next Story