தமிழில் வெளியாகும் “பிரதம திரிஷ்டிய குட்டக்கார்”

‘பிரதம திரிஷ்டிய குட்டக்கார்’ மலையாள திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி வெளியானது.
தமிழில் வெளியாகும் “பிரதம திரிஷ்டிய குட்டக்கார்”
Published on: 

பார்வதி திருவோத்து நடித்த ‘பிரதம திரிஷ்டிய குட்டக்கார்’ மலையாள திரைப்படம் தமிழில் ரிமேக் செய்யப்பட்டு வரும் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் ஷகத் இயக்கத்தில் நடிகர்கள் பார்வதி திருவோத்து, சித்தார்த் பரதன், மாத்யூ தாமஸ், உன்னி மாயா உள்ளிட்டோர் நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் ‘பிரதம திரிஷ்டிய குட்டக்கார்’.

காவல் நிலையத்தில் காவல்துறையினரால் நடக்கும் அதிகார அத்துமீறல்கள் குறித்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றதுடன் விமர்சன ரீதியாகவும் நல்ல கருத்துகளைப் பெற்றது. காவல் அதிகாரியாக நடிகை பார்வதியின் கதாபாத்திரமும் நன்றாக எழுதப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறியிருந்தனர்.

இப்படம் உலக அளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை, திரைக்கதையை பி. எஸ். சுப்ரமணியம், விஜேஷ் தொட்டிங்கல் ஆகியோர் எழுதியிருந்தனர்.

ஓடிடியில் வெளியானது

‘பிரதம திரிஷ்டிய குட்டக்கார்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி வெளியானது.

“பிரதம திரிஷ்டிய குட்டக்கார்” படத்தின் தமிழில் ரிமேக்

இந்த நிலையில், பார்வதி திருவோத்து நடித்த ‘பிரதம திரிஷ்டிய குட்டக்கார்’ மலையாள திரைப்படத்தை தமிழில் ‘பிடிகே’ என்கிற பெயரில் டப்பிங் செய்துள்ளனர். இது, வருகிற அக்டோபர் 23 ஆம் தேதி தமிழக திரைகளில் வெளியாகவுள்ளது. தமிழக வெளியீட்டு உரிமையை ஏஜிஎஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com