தமிழ் படங்களில் நடிக்க ஆசை - பிரக்யா ஜெய்ஸ்வால்

தமிழ் சினிமா எனக்கு மிகவும் பிடிக்கும் என்று நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் பிரக்யா ஜெய்ஸ்வால் 'அகண்டா - 2' படத்தை தொடர்ந்து தற்போது 'டைசன் நாயுடு' படத்தில் நடித்து வருகிறார். கவர்ச்சியுடன் கூடிய நடிப்பால் ஈர்த்து வரும் பிரக்யாவுக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். விரைவில் தமிழிலும் தலைகாட்ட போவதாக பேச்சு அடிபடுகிறது.

இதற்கிடையில் மாலத்தீவு சென்றுள்ள பிரக்யா, பிகினி உடை அணிந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதுதொடர்பான ரசிகர்கள் உரையாடலில், "ஆடை சுதந்திரத்தை நான் என்றுமே தவறாக பயன்படுத்தியது கிடையாது. அதை செய்யவும் மாட்டேன். இந்தியாவின் பண்பாட்டை மீறியது கிடையாது. அதேவேளை வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அதற்கேற்றவாறு உடை அணிகிறேன். இது தவறல்ல, கலாசாரத்தை நான் மீறுவது கிடையாது" என்று பிரக்யா ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் தமிழ் சினிமா பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது. "தமிழ் சினிமா எனக்கு மிகவும் பிடிக்கும். பல தடவை தமிழகம் வந்திருக்கிறேன். அங்குள்ள ரசிகர்களின் ரசனை அளப்பரியது. தமிழ் படங்களில் நடிக்க எனக்கும் ஆசைதான். காத்திருக்கிறேன். காலம் கனியட்டும். பார்க்கலாம்" என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com