பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்த கேள்விக்கு நடிகை நமீதாவின் பதில்

நடிகை நமீதா இன்று தனது பிறந்தநாளை ஒட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்த கேள்விக்கு நடிகை நமீதாவின் பதில்
Published on

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நமீதா. இப்போது குடும்பம், குழந்தைகள் என செட்டிலாகி விட்டவர் அரசியல் களத்தில் பிஸியாக உள்ளார். பாஜகவில் நட்சத்திர பேச்சாளராக மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வந்த நடிகை நமீதா, இன்று தனது 43வது பிறந்த நாளுக்காக சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்தி, அன்னதானம் செய்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், இனிமேல் வருடாவருடம் தனது பிறந்தநாளுக்கும் தன் குழந்தைகள் பிறந்தநாளுக்கும் கோயிலில் வழிபாடு நடத்தி அன்னதானம் செய்ய இருப்பதாகத் தெரிவித்தார்.

அப்போது அவரிடம் கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்து 'ஒரு பெண்ணாக பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தை எப்படி பார்க்கறீர்கள்?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்தான கேள்வியை எதிர்கொண்ட நமீதா முதலில் புரியாமல் முழித்தார். தான் பிரச்சார பிஸியில் இருப்பதாக சிரித்து மழுப்பினார். பின்பு, அவரிடம் அந்தக் கேள்வி திரும்ப கேட்கப்படவே நமீதாவுக்கு பின்னால் இருந்த ஒருவர், 'தப்பு என்றால் தப்புதான்' என்று சொல்லும்படி சொன்னார்.

View this post on Instagram

அதையே பதிலாக சொன்ன நமீதா, "நீதிமன்றம் இதில் முடிவு எடுக்கும். என்னிடம் இந்தக் கேள்வியை கேட்காதீர்கள். பிறந்தநாளுக்காக வந்திருக்கிறேன். அரசியல் வேண்டாம்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com