பிரீத்தி முகுந்தனின் முதல் மலையாள படம் - பர்ஸ்ட் லுக் வெளியீடு

இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான 'ஓம் பீம் புஷ்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரீத்தி முகுந்தன். அதனைத்தொடர்ந்து, கவின் நடிப்பில் வெளியான 'ஸ்டார்' படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர், சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய 'ஆச கூட' ஆல்பம் பாடலில் நடனமாடி மேலும் புகழ் அடைந்த இவர் தற்போது மலையாளத்திலும் அறிமுகமாக உள்ளார்.
அதன்படி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் முதல் மலையாள படத்திற்கு 'மைனே பியார் கியா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில், கதாநாயகனாக சமீபத்தில் வெளியான திரில்லர் படமான 'முரா' படத்தில் நடித்திருந்த ஹிருது ஹாரூண் நடிக்கிறார்.
பைசல் பாசிலுதீன் இயக்கும் இப்படத்தில், அனார்கலி மரிக்கார் மற்றும் அல்தாப் சலீம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு எற்கனவே தொடங்கி கடந்த ஜனவரி மாதம் முடிந்தநிலையில் , தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும், இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






