”'டெலுலு'வா நான்தான் நடிச்சிருக்கணும்” - ரகசியத்தை உடைத்த பிரீத்தி முகுந்தன்

பிரீத்தி முகுந்தன் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான 'பிளாஸ்ட்' திரைப்படம், நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
”'டெலுலு'வா நான்தான் நடிச்சிருக்கணும்” - ரகசியத்தை உடைத்த பிரீத்தி முகுந்தன்
Published on

சென்னை,

அகில் சத்யன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சர்வம் மாயா'. இத்திரைப்படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. இதில் ரியா சிபு நடித்த ’டெலுலு’ கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.

'டெலுலு' கதாபாத்திரத்தை தவறவிட்ட பிரீத்தி முகுந்தன்

இந்நிலையில், இப்படத்தில் அஜு வர்கீஸ் மற்றும் ஜனார்தனனுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரீத்தி முகுந்தன், தான் முதலில் ரியா ஷிபு நடித்த 'டெலுலு'வாக நடிக்க வேண்டியிருந்தது என கூறியுள்ளார்.

அவர் பேசுகையில், "நான் முதலில் 'டெலுலு' கதாபாத்திரத்திற்காகத்தான் ஆடிஷன் செய்தேன். அப்போது படத்தின் கதை சற்று வித்தியாசமாக இருந்தது. நான் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால், கதை என் கதாபாத்திரத்திற்கும் நிவின் பாலியின் பிரபேந்து கதாபாத்திரத்திற்கும் இடையிலான ஒரு காதல் கதையாக மாறியிருக்கும்.

இயக்குனர் அகில் சத்யனின் புதிய பிளான்

பின்னர், இயக்குனர் அகில் உங்களுக்காக மற்றொரு கதாபாத்திரத்தை எழுதியுள்ளேன், அதை செய்கிறீர்களா?' என்று கேட்டார். அது என்ன கதாபாத்திரம் என்று அப்போது எனக்குத் தெரியாது, அது பிறகுதான் கதையில் சேர்க்கப்பட்டது. ஆனால், அந்த படக்குழுவையும் கதையையும் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் உடனே சம்மதித்தேன்" என்றார்.

Also Read
மோகன்லாலின் “திரிஷ்யம் 3” படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது
”'டெலுலு'வா நான்தான் நடிச்சிருக்கணும்” - ரகசியத்தை உடைத்த பிரீத்தி முகுந்தன்

திரையரங்குகளில் வெளியாகி கலக்கும் 'பிளாஸ்ட்'

இதற்கிடையில், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான 'பிளாஸ்ட்' திரைப்படம், நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் சுபாஷ் கே. ராஜ் இயக்கிய இப்படத்தில் அர்ஜுன் மற்றும் அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'வானவில்' (2000) படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குக் பின் அர்ஜுன் மற்றும் அபிராமி இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com