மீண்டும் இணையும் 'பிரேமம்' பட கூட்டணி.. புதிய படத்தின் டைட்டில் வெளியானது

இது நடிகர் நிவின் பாலியின் 50-வது திரைப்படமாகும்.

மீண்டும் இணையும் 'பிரேமம்' பட கூட்டணி.. புதிய படத்தின் டைட்டில் வெளியானது
Published on

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி, அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அவர், நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள 'டியர் ஸ்டூடன்ஸ்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் 'பென்ஸ்' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

நிவின் பாலி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பிரதிச்சாயா', 'பேபி கேர்ள்' உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து பல புதிய படங்களில் அவர் ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்நிலையில், நிவின் பாலியின் 50-வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த படத்திற்கு 'மாத்திற்க விஜயம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம், 'பிரேமம்' படத்திற்குப் பிறகு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் மற்றும் நடிகர் நிவின் பாலி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த கூட்டணி மீண்டும் கைகோர்த்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ரிஷப் ஷெட்டி வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும், படம் மாபெரும் வெற்றி பெற நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com