பிரேம்குமார் - பகத் பாசில் படப் பணிகள் தொடக்கம்

தமிழில் பகத் பாசில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
பிரேம்குமார் - பகத் பாசில் படப் பணிகள் தொடக்கம்
Published on

சென்னை,

’96’, 'மெய்யழகன்' திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் சி. பிரேம்குமார் இயக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தத் திரைப்படம் ஒரு திரில்லர் பாணியில் உருவாகவுள்ளதாக இயக்குனர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இதில் பகத் பாசில் மற்றும் ஷிவதா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

ஐசரி கணேஷ் வழங்கும் இத்திரைப்படத்தை, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் மான்சூன் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. வடிவேலுடன் நடித்த 'மாரீசன்' படத்திற்குப் பிறகு, பகத் பாசில் தமிழில் தனி ஒரு நாயகனாக நடிக்கும் முதல் நேரடித் தமிழ்ப் படம் இதுவாகும். இவர்களுடன் சேத்தன், ஹரிஷ் உத்தமன் மற்றும் கருணாகரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

மகேஷ் நாராயணனின் 'பேட்ரியாட்' படத்தில் பகத் பாசிலும் ஸ்ஷிவாதாவும் இணைந்து நடித்திருந்தாலும், இருவரும் இணைந்து முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். இது தவிர, ஷிவதா சமீபத்தில் சமுத்திரக்கனியுடன் 'தடயம்' என்ற ஓடிடி வெப் சீரிஸிலும், சூர்யா நடித்த 'கருப்பு' திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இதனை மேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது. தற்போது இப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 32-வது படம் இதுவாகும். இப்படத்தின் மூலம் பகத் பாசில் - பிரேம்குமார் கூட்டணி உருவாகிறது. இதர தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com