கொரோனா பரவலை தடுக்க ஐஸ்வர்யா ராஜேஷ் விழிப்புணர்வு வீடியோ

கொரோனா பரவலை தடுக்க நடிகர் நடிகைகள் வீடியோக்களில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது.
கொரோனா பரவலை தடுக்க ஐஸ்வர்யா ராஜேஷ் விழிப்புணர்வு வீடியோ
Published on

நாம் இப்போது கொரோனா 2-வது அலையில் இருக்கிறோம். இது நம் எல்லோருக்குமே தெரியும். முதல் அலையைவிட இரண்டாவது அலை நிறைய பேரை பாதித்துள்ளது. முக்கியமாக இதய நோய், ஆஸ்துமா உள்ளிட்ட உடல் நல பிரச்சினை உள்ளவர்களை நிறையவே பாதித்து உள்ளது. தயவு செய்து வீட்டில் இருந்து வெளியே வராதீர்கள். அப்படி ஒருவேளை அவசர தேவையாக வெளியே வர வேண்டும் என்றால் இரண்டு முக கவசம் போட்டுக் கொள்ளுங்கள். அதுமட்டுமன்றி கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்துங்கள். முக்கியமாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். கொரோனாவை வெல்வோம். மக்களை காப்போம். நம்மையும் காப்போம். நாட்டையும் காப்போம்.'' இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com