முன்பு விஜய், தற்போது சிவகார்த்திகேயன்...11 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ''துப்பாக்கி'' பட வில்லன்


Previously Vijay, now Sivakarthikeyan...Thuppakki villain in Tamil cinema after 11 years
x

வித்யுத் ஜம்வால் கடைசியாக சூர்யாவுடன் ''அஞ்சான்'' (2014) படத்தில் நடித்திருந்தார்.

சென்னை,

பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் படத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மணி வசந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ''மதராஸி'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார்.

முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி (2012) படத்தில் வில்லனாக நடித்து கலக்கி இருந்த வித்யுத், கடைசியாக சூர்யாவுடன் ''அஞ்சான்'' (2014) படத்தில் நடித்திருந்தார்.

தற்போது அவர் ''மதராஸி'' படத்தின் மூலம் முருகதாஸுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். இப்படம் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னும் அதற்கு 30 நாட்கள் உள்ள நிலையில் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story