‘அகண்டா 2’ படத்தை பார்க்க பிரதமர் மோடி ஆர்வம்- இயக்குநர் போயபட்டி சீனு


‘அகண்டா 2’ படத்தை பார்க்க பிரதமர் மோடி ஆர்வம்- இயக்குநர் போயபட்டி சீனு
x
தினத்தந்தி 15 Dec 2025 12:04 PM IST (Updated: 15 Dec 2025 12:10 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் பாலய்யாவின் 'அகண்டா 2' படத்தை பிரதமர் மோடி பார்க்கவுள்ளதாக அதன் இயக்குநர் போயபட்டி சீனு கூறியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த 12ந் தேதி வெளியான படம் ‘அகாண்டா 2’ . இந்த படத்தை இயக்குநர் போயபடி ஸ்ரீனு இயக்கியுள்ளார். இதில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஆதி பினிசெட்டி, கபீர் துல்ஹன் சிங், சாஸ்வதா சட்டர்ஜி, அச்யுத் குமார், பூர்ணா, ஹர்ஷா, ஜெகபதி பாபு, ராச்சா ரவி, ஐயப்பா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று வருகிறது. இப்படம் பாலய்யாவின் கெரியரில் மிகச்சிறிந்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அகண்டா 2 படம் குறித்து சுவாரஸ்ய தகவல் கிடைத்துள்ளது. அதாவது, நடிகர் பாலய்யாவின் 'அகண்டா 2' படத்தை பிரதமர் மோடி பார்க்கவுள்ளதாக அதன் இயக்குநர் போயபட்டி சீனு கூறியுள்ளார். 'அகண்டா 2' படம் குறித்து பிரதமர் மோடி கேள்விப்பட்டு, “இவ்வளவு நல்ல படத்தை நாமும் பார்த்து ஆதரவளிக்க வேண்டும்" என கூறி, திரைப்படத்தை பார்க்க முடிவு செய்துள்ளதாக போயபட்டி சீனு தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story