"கொள்கைதான் மக்களை ஆள வேண்டும்" - நடிகர் உபேந்திரா

உபேந்திரா தற்போது '45 தி மூவி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடுத்துள்ளார்.
சென்னை,
கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குனருமான உபேந்திரா தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடுத்துள்ள படம், '45 தி மூவி. இந்த படத்தினை பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ளார்.
பேண்டசி கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த 25ந் தேதி வெளியானது. சமீபத்தில் இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் உபேந்திரா அரசியல் பற்றி சில வார்த்தைகளை பகிர்ந்தார். அவர் பேசுகையில்,
“கொள்கைதான் மக்களை ஆள வேண்டும், தனி ஒரு தலைவன் அல்ல, மனிதர்கள் மாறிக் கொண்டே வருவார்கள் ஆனால் கொள்கைகள், தத்துவங்கள் மாறாது. ஒரு போர்ச் சூழல் ஏற்பட்டால், மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். போர் வேண்டுமா?, வேண்டாமா? என்று, தலைவர் தீர்மானிக்கக் கூடாது. ஏனென்றால் பாதிக்கப்படப்போவது மக்கள்தான், அந்த தலைவர் அல்ல” என்றார்.






