

கடந்த ஜூலை மாதம் துபாயில் வசித்து வரும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கோல்டன் விசா பெற்றார். சமீபத்தில் முன்னணி மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், இந்தி தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் ஆகியோருக்கும் கோல்டன் விசா கிடைத்தது.
இந்த நிலையில் மலையாள நடிகர்கள் பிருதிவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோருக்கும் தற்போது கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. இருவரும் பல தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார்கள். துல்கர் சல்மான், நடிகர் மம்முட்டியின் மகன். அவர் கூறும்போது, சர்வதேச அளவில் திறமையாளர்களை ஊக்குவிக்கும் ஐக்கிய அமீரகத்தின் அங்கீகாரம் கிடைத்தது பாக்கியம் என்றார்.