குருவாயூர் கோவிலில் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய பிரித்விராஜ்

நடிகர் பிரித்விராஜ் நடிக்கும் ‘குருவாயூர் அம்பல நடையில்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
குருவாயூர் கோவிலில் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய பிரித்விராஜ்
Published on

திருவனந்தபுரம்,

இயக்குனர் விபின் தாஸ் இயக்கத்தில் பிரித்விராஜ் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'குருவாயூர் அம்பல நடையில்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்துக்கு கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. தெய்வத்தின் பெயரை படத்திற்கு வைத்து கேலி செய்வதற்குத் திட்டமிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்தனர்.

படத்தின் பெயரை காரணமாக வைத்து பிரித்விராஜுக்கு மிரட்டல் விடுப்பதை ஏற்க முடியாது என்று மலையாள பட உலகினர் கண்டனம் தெரிவித்து வந்தனர். குருவாயூர் அம்பல நடையில் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதனை நடிகர் பிரித்விராஜ் தனது இணையப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

Prithviraj Sukumaran (@PrithviOfficial) May 12, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com