ராகுல் சதாசிவன் இயக்கத்தில் இணையும் பிருத்விராஜ்

ராகுல் சதாசிவன் நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் மஞ்சு வாரியரை முன்னணி கதாபாத்திரங்களாக வைத்து புதிய ஹாரர் திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் சதாசிவன் இயக்கத்தில் இணையும்  பிருத்விராஜ்
Published on

மலையாள பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ், தமிழிலும் 'கனா கண்டேன்', 'நினைத்தாலே இனிக்கும்', 'பாரிஜாதம்', 'மொழி' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட பிருத்விராஜ், சாக்லெட் பாய், ஆக்ஷன் ஹீரோ என எந்த ஒரு அடையாளத்திற்குள்ளும் அடங்காமல், தான் செய்யும் அனைத்து கதாபாத்திரங்களிலும் தன் தனிப்பட்ட நடிப்புத் திறமையால் ஜொலிக்கும் ஒரு சில நடிகர்களிலும் பிருத்விராஜுக்கு தனி இடம் உண்டு.சினிமாத் துறைக்குள் நுழைந்த 16 வருடங்களிலேயே 100 படங்களில் நடித்து முத்திரைப் பதித்திருக்கிறார். மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கியிருந்தார்.

ஹாரர் இயக்குநர் ராகுல் சதாசிவன் நடிகர் பிருத்விராஜை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க உள்ளாராம்.பூதகாலம், பிரம்மயுகம் உள்ளிட்ட ஹாரர் திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் ராகுல் சதாசிவன். இறுதியாக, நடிகர் பிரணவ் மோகன்லாலை வைத்து டீயஸ் ஈரே என்கிற திரைப்படத்தை இயக்கினார். இப்படமும் ரூ. 80 கோடிக்கு அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது.

தற்போது, ராகுல் சதாசிவன் நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் மஞ்சு வாரியரை முன்னணி கதாபாத்திரங்களாக வைத்து புதிய ஹாரர் திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிருத்விராஜ் ஹாரர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com