பிருத்விராஜின் ‘ஐ நோபடி’ படத்தின் டீசர் வெளியானது

நிசாம் பஷீர் இயக்கத்தில் பிருத்விராஜ் , பார்வதி திருவோத்து நடிக்கும் ‘ஐ நோபடி’ படம் வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது.
பிருத்விராஜின்  ‘ஐ நோபடி’ படத்தின்  டீசர் வெளியானது
Published on

தமிழ், மலையாள சினிமாவில் பிரபல நடிகரான பிருத்விராஜ் மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல படங்களைக் கொடுத்ததுடன் லூசிபர், ப்ரோ டாடி, எம்புரான் ஆகிய திரைப்படங்களை இயக்கி இயக்குநராக அங்கீகாரம் பெற்றார்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் ‘வாரணாசி’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பிரித்விராஜ். மேலும் இவர் ‘சலார் 2’, ‘கலிபா’ போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

‘ஐ நோபடி’ படத்தை ‘ரோஷாக்’ பட புகழ் இயக்குனர் நிசாம் பஷீர் இயக்குகிறார். சமீர் அப்துல் திரைக்கதை எழுதியுள்ளார். இப்படத்தில் பிரித்விராஜுடன் இணைந்து பார்வதி திருவோத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே இவர்களது கூட்டணி என்னு நிண்டே மொய்தீன் , மை ஸ்டோரி ஆகிய படங்களில் இணைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ‘ஐ நோபடி’ படத்தில் இணைந்திருக்கிறது. ஈ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து பிரித்விராஜ் இந்த படத்தினை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘அனிமல்’ திரைப்படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க ஆக்சன் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், ‘ஐ நோபடி’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை மாதத்தில் இப்படம் ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com