

இயக்குநர் வைசாக் இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவான ‘கலிஃபா’ திரைப்படத்தில் நாயகனாக நடிகர் பிருத்விராஜ் நடிக்க அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு 2025 ஆகஸ்ட் 6 ம் தேதி லண்டனில் தொடங்கியது. இதன் கதையை ஜினு ஆபிரகாம் எழுதியுள்ளார். இவர் இதற்கு முன்பு பிருத்விராஜுடன் ‘ஆடம் ஜோன்’ மற்றும் ‘கடுவா’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். இது பழிவாங்கும் திரில்லர் படமாகும். லண்டன், துபாய், நேபாளம் மற்றும் கேரளாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தில் நடிகர் மோகன்லால் மாஃபியா டான் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில், ‘கலிஃபா’ படம் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.