ஓட்டல் தொழிலில் பிரியா பவானி சங்கர்

நடிகைகள் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை பாதுகாப்பான தொழில்களில் முதலீடு செய்து வருமானம் பார்த்து வருகிறார்கள். இந்த பட்டியலில் தற்போது பிரியா பவானி சங்கரும் இணைந்து ஓட்டல் தொழிலில் இறங்கி இருக்கிறார்.
ஓட்டல் தொழிலில் பிரியா பவானி சங்கர்
Published on

பிரியா பவானி சங்கர் மேயாத மான் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அகிலன், பத்துதல, டிமாண்டி காலனி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சென்னை கடற்கரையோரத்தில் புதிய வீடு வாங்கி இருப்பதாக அறிவித்து காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். ''எங்களுக்கு 18 வயது இருக்கும்போது கடற்கரை பகுதியில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டோம் அந்த கனவு நிறைவேறி இருக்கிறது'' என்றார்.

இந்த நிலையில் தற்போது புதிய ஓட்டல் தொடங்கி இருப்பதாக அறிவித்து உள்ளார். சமூக வலைத்தளத்தில் ஓட்டல் வீடியோவை பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''எங்கள் சொந்த உணவகம். இது எப்போதும் எங்கள் கனவாகவே இருந்தது. அது நனவாகும் நாள் நெருங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com