'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த பிரியா வாரியர்


குட் பேட் அக்லி படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த பிரியா வாரியர்
x

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'குட் பேட் அக்லி' படத்தில் பிரியா வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இதனிடையே, அஜித்துடன் நடித்தது குறித்தும் அவருடன் பணியாற்றியது குறித்தும் நடிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த நிலையில், நடிகை பிரியா வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். மேலும், ' குட் பேட் அக்லி படக்குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் நன்றி. குட் பேட் அக்லி படத்தை ஏற்றுக்கொண்டு அனைத்து அன்பையும் ஆதரவையும் எங்களுக்கு வழங்கிய பார்வையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story