பிரியா வாரியர் நெகிழ்ச்சி

பிரியா வாரியர் கண்ணடிக்கும் வீடியோவை பார்த்த புகழ்பெற்ற இந்தி நடிகர் ரிஷிகபூர் பாராட்டி உள்ளார். இதுவே ”பெரிய திருப்தி'' என்று பிரியா வாரியர் நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
பிரியா வாரியர் நெகிழ்ச்சி
Published on

'ஒரு அடார் லவ்' மலையாள படத்தின் பாடல் காட்சியொன்றில் கண்ணடித்து இந்தியா முழுவதும் பிரபலமான பிரியா வாரியர் நடிகையான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "நான் சிறுவயதில் சினிமா பார்த்துவிட்டு வந்த உடனே கண்ணாடியின் முன்நின்று கொண்டு ஹீரோயின் மாதிரி வசனங்களை சொல்லி பார்த்துக்கொள்வேன். ஏதோ தமாஷாக அப்படி செய்கிறேன் என்று என் பெற்றோர் நினைத்தனர். ஆனால் பிளஸ்-2 படிக்கையில் ஆடிஷனுக்கு சென்றபோதுதான் அவர்களுக்கு விஷயம் புரிந்தது. பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தோடு சினிமா துறைக்கு என்னை அனுப்பி வைத்தனர்.

நடிகையாக நான் எந்த அளவிற்கு புகழ் பெற்றேன் என்பது எனக்கு தெரியாது. ஆனால் கண்ணடிக்கும் வீடியோவை பார்த்த புகழ்பெற்ற இந்தி நடிகர் ரிஷிகபூர் இந்த நடிகைக்கு பெரிய ஸ்டார் அந்தஸ்து வரும். இப்படிப்பட்ட ஒரு நடிகை நான் ஹீரோவாக இருந்த காலத்தில் எதற்காக வரவில்லை என்று டுவீட் செய்தார். எனக்கு எவ்வளவு பெயரும், புகழும் கிடைத்தாலும் இந்த பாராட்டைவிட பெரிய பாராட்டு உலகில் இனி எப்போதும் கிடைக்காது. இதுவே பெரிய திருப்தி'' என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com