பட அதிபர் மீது பிரியாமணி புகார்

சினிமாவில் வளர்ந்த ஆரம்ப காலங்களில் பிரபல தயாரிப்பாளர் பிடிக்காத வேலையை செய்ய சொல்லி தொல்லை கொடுத்தார் என்று பிரியாமணி புகார் தெரிவித்துள்ளதாக இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது.
பட அதிபர் மீது பிரியாமணி புகார்
Published on

பருத்தி வீரன் படத்துக்காக தேசிய விருது பெற்ற பிரியாமணி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். திருமணத்துக்கு பிறகும் சினிமாவை விட்டு ஒதுங்கவில்லை. தற்போது 4 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். பேமிலிமேன் வெப் தொடர் அவருக்கு இன்னொரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிலையில் சினிமாவில் வளர்ந்த ஆரம்ப காலங்களில் பிரபல தயாரிப்பாளர் பிடிக்காத வேலையை செய்ய சொல்லி தொல்லை கொடுத்தார் என்றும், அவரால் சில பிரச்சினைகளை எதிர்கொண்டேன் என்றும் பிரியாமணி புகார் தெரிவித்துள்ளதாக இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது.

இதுகுறித்து பிரியாமணி கூறும்போது, ''நான் நடித்த ஒரு படம் பாதி முடிந்த நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் என்னை அணுகி தொப்புள் அருகே பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று தொந்தரவு செய்தார். எனக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் அவரது நிபந்தனையை ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சினிமாவில் கதாநாயகிகள் தங்களுக்கு விருப்பம் இல்லாத வேலைகளை செய்வது என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது" என்றார். தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் பெயரை அவர் வெளியிடவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com