கருப்பாக இருப்பதாக கேலி செய்தவர்களுக்கு பிரியாமணி பதிலடி

கருப்பாக இருப்பதாக கேலி செய்தவர்களுக்கு பிரியாமணி பதிலடி
Published on

தமிழில் 'பருத்தி வீரன்' படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிரியாமணி தொடர்ந்து அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். திருமணத்துக்கு பிறகும் நடிக்கிறார். இந்தியில் நடித்த 'த பேமிலிமேன்' வெப் தொடர் திருப்புமுனையாக அமைந்தது.

தற்போது ஷாருக்கான், நயன்தாராவுடன் 'ஜவான்' படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் தனது உடல் நிறத்தை வைத்து கேலி செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரியாமணி கூறும்போது, "நான் சமூக வலைத்தளத்தில் மேக்கப் இல்லாமல் எனது புகைப்படங்களை பகிர்ந்தேன். அதை பார்த்து பலர் நான் கருப்பாக இருக்கிறேன். மாநிறத்தில் இருக்கிறேன் என்று கேலி செய்தனர். ஆன்டி மாதிரி இருக்கிறேன்" என்றும் பேசினர்.

"அப்படி இருந்தால்தான் என்ன? இப்போது இல்லை என்றாலும் கூட நாளை உங்களுக்கும் வயதாகி முதியவராகத்தான் போகிறீர்கள். எனக்கு இப்போது 38 வயது ஆகிறது. இந்த வயதிலும் நான் கட்டுக்கோப்பான தோற்றத்தில்தான் இருக்கிறேன். நான் எப்படி இருக்கிறேனோ அதில் எனக்கு மகிழ்ச்சிதான். எனவே உங்கள் வாயை மூடுங்கள்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com