''ஜன நாயகன் படம் சூப்பர் ஸ்பெஷலாக இருக்கும்'' - பிரியாமணி


Priyamani on Jana Nayagan: The Vijay film is going to be super special
x
தினத்தந்தி 4 July 2025 2:19 PM IST (Updated: 4 July 2025 2:20 PM IST)
t-max-icont-min-icon

'ஜன நாயகன்'' படத்தில் பிரபல நடிகை பிரியாமணி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சென்னை,

விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும், மிகவும் எதிர்பார்க்கப்படும் ''ஜன நாயகன்'' படத்தில் பிரபல நடிகை பிரியாமணி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் நடிப்பது குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய பிரியாமணி, தனது கெரியரில் இது ஒரு சிறந்த படமாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.

அவர் கூறுகையில், "விஜய்யுடன் நடிப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. ஜனநாயகன் படம் சூப்பர் ஸ்பெஷலாக இருக்கும். ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். எனது கெரியரில் இது ஒரு சிறந்த படமாக இருக்கும்" என்றார்

எச் வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது.


1 More update

Next Story