பிரியாமணியின் முதல் தமிழ் வெப் தொடரின் டீசர் - வைரல்


Priyamanis First Tamil Web Series Teaser - Viral
x

ரேவதி இயக்கும் இந்த வெப் தொடருக்கு 'குட் வைப்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை,

சமீபத்தில், தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபல ஓடிடி தளமான ஜியோ ஹாட்ஸ்டார், அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய வெப் தொடரை அறிவித்தது.

பழம்பெரும் நடிகையும் திரைப்பட இயக்குனருமான ரேவதி இயக்கும் இந்த வெப் தொடருக்கு 'குட் வைப்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பிரியாமணி நடிக்கும் முதல் தமிழ் வெப் தொடராகும்.

இந்த வெப் தொடரில் அவருடன் சம்பத் ராஜ் மற்றும் ஆரி அர்ஜுனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த தொடரின் டீசர் வெளியாகி இருக்கிறது. இதன் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story