நடிகருக்கு இணையான சம்பளம்: பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சி

“என்னுடைய 22 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இப்போதுதான் முதன்முறையாக ஆண் நடிகருக்கு இணையான சம்பளத்தை பெற்றிருக்கிறேன்” என நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
நடிகருக்கு இணையான சம்பளம்: பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சி
Published on

தமிழில் விஜய் ஜோடியாக 'தமிழன்' படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் கலக்குகிறார். தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார். இந்த தொடரை புகழ்பெற்ற ஹாலிவுட் டைரக்டர்கள் ரூஸ்ஸோ சகோதரர்கள் இயக்கி உள்ளனர்.

இதில் ரிச்சர்ட் மேடன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த தொடரில் நடித்த பிரியங்கா சோப்ராவுக்கு ஆண் நடிகருக்கு இணையான சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பிரியங்கா சோப்ரா அளித்துள்ள பேட்டியில், "நான் சினிமா துறையில் 22 ஆண்டுகளாக இருக்கிறேன். இதுவரை 70 திரைப்படங்களிலும், 2 டி.வி. தொடர்களிலும் நடித்து இருக்கிறேன். எனது சினிமா வாழ்க்கையில் முதல் தடவையாக இப்போது சிட்டாடல் தொடரில் நடிக்கும்போது ஆண் நடிகருக்கு இணையான சம்பளம் பெற்றேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே உழைப்பைத்தான் மற்ற படங்களுக்கும் கொடுத்தேன். ஆனால் குறைவான ஊதியமே கிடைத்தது'' என்றார்.

View this post on Instagram

X

Daily Thanthi
www.dailythanthi.com