ஜோத்பூர் அரண்மனையில் நடக்கிறது : பிரியங்கா சோப்ரா திருமண ஏற்பாடுகள்

இந்தி நட்சத்திர ஜோடி தீபிகா படுகோனே–ரன்வீர்சிங் திருமணம் இத்தாலியில் ஆடம்பரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்து நடிகை பிரியங்கா சோப்ரா–அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸ் திருமணத்தில் அனைவரது கவனமும் திரும்பி இருக்கிறது.
ஜோத்பூர் அரண்மனையில் நடக்கிறது : பிரியங்கா சோப்ரா திருமண ஏற்பாடுகள்
Published on

பிரியங்கா சோப்ராநிக் ஜோனாஸ் இவர்களது திருமணம் அடுத்த மாதம் (டிசம்பர்) 1ந் தேதி ஜோத்பூர் அரண்மனையில் நடக்கிறது.

அரசு குடும்பத்து திருமணம்போல் தனக்கு நடக்க வேண்டும் என்பது பிரியங்கா சோப்ராவின் ஆசை. இதற்காகவே அரண்மனையை தேர்வு செய்துள்ளார். திருமணம் நடக்க உள்ள அரண்மனையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன. திருமண விழாவை 4 நாட்கள் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.

அமெரிக்காவில் இருந்து நிக் ஜோனாசின் உறவினர்களும், நண்பர்களும் இந்தியா வருகிறார்கள். அவர்களை வரவேற்கவும், சிறப்பு விருந்துகள் அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ராவுக்கு நிக் ஜோனாஸ் ரூ.2 கோடிக்கு மோதிரம் அணிவித்தார். திருமணத்துக்கும் நகைகளால் அவரை அலங்கரிப்பார் என்கின்றனர்.

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் பிரியங்கா சோப்ரா ரூ.9.5 கோடிக்கு நகைகள் அணிந்து இருந்தார். திருமண புகைப்படங்களை வெளியிடும் உரிமையை இருவரும் ரூ.18 கோடிக்கு விற்று இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் பிரபலங்கள் வசிக்கும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் குடியேறுகிறார்கள். இதற்காக அங்கு ஆடம்பரமான வீடு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com